அஜித்தின் விவேகம் படம் வெளியாகி இப்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பயப்படாமல் கூறும் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது அவர் அஜித்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள்.
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா? என்று எழுதியிருக்கிறார்.
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்
-cineulagam.com
நீங்கள் நடிகர் அஜித் அவர்களை கேட்டுக்கொண்டிருப்பது போல, மலேஷியா தமிழனாகிய நான் என் நாட்டு தமிழ் அன்பர்களுக்கு விடுக்கும் கோரிக்கை : மலேஷியா தமிழ் வியாபாரிகள் சொந்த கடை வைத்து , இங்குள்ள தமிழர்களால் வியாபாரத்தை பெருக்கி நாள் வாழ்வு வாழும் வியாபாரிகள் தயவு செய்து கடை முன் வைத்துள்ள விளம்பரம் பலகையில் தேசிய மொழியோடு தமிழ் , ஆங்கிலம் மொழிக்கு முக்கியதுவம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறன் . கடை தமிழருடையது , விற்கும் பொருள் தமிழர் , இந்தியர்கள் பட்டுமே வாங்கி தங்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடியவர்கள் , அப்படி இருக்க தேசியமொழியில் மட்டும் விளம்பர பலகையில் எழுதுவதில் என்ன பயன் ? வாடிக்கையாளர்கள் ஏன் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை என கேட்கும்போது ‘நகரமைப்பு அதிகாரி தமிழில் எழுத அனுமதியளிக்கவில்லை’ என்கிறார்கள் ! அப்படி என்றால் எவ்வாறு சீனர்கள் சீனமொழயில் விளம்பரப்பலகையில் எழுதியிருக்கின்றனர் ? அவர்களை ஏன் ‘ நகரமைப்பு அதிகாரிகள் சீனத்தில் எழுதுவதற்கு தடுக்கவில்லை ‘ , இன்னும் சொல்லப்போனால் அயல்நாட்டில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் பங்களாதேஷ் இனத்தவர் கடை வைத்துள்ளவர்கள் தன் கடைகளில் உள்ள விளம்பரப்பலகையில் பங்களாதேஷ் மொழியில் சேய்மொழியை விட பெரியதாக எழுதியுள்ளார்கள் ? ? ? அப்படி என்றால் இந்நாட்டின் குடிமனாகிய ஒரு சில வியாபார தமிழருக்கு மொழி பற்று இல்லையா ? இவ்வாறு இருக்குமாயின் : கடைக்கு உரிமையாளராகயிருந்து தமிழ்மொழியினை புறக்கணிப்பாராக இருந்தால் ‘ இனி மேல் தமிமொழியினை சுவாசிக்கும் அனைவரும் அவர்களில் கடைகளில் எந்த ஒரு பொருட்களையும் வாங்குதில்லை ‘ என சபதம் செய்வோம் , இதனை மலேசியாவில் உள்ள அணைத்து தமிழ் சங்ககங்களும் ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுத்து செயலில் இயங்கிடவேண்டும் . நாம் வளர்வோம் , தமிழ் மொழியினை வளர்ப்போம் . வாழ்க நம் இனம் , வளர்க நம் மொழி . நன்றி .
அவர் ப்ராஹ்மின் (brahmin ) அவர் ஏன் முருகன் கோயிலுக்கு போக வேண்டும்
அதே போல இந்தியாவில் இருந்து வருகின்ற பொருட்கள் அனைத்திலும் வேறு வேறு மொழிகள் இருக்கின்றன. ஆனால் தமிழைக் காணோம்! அதனையும் புறக்கணிப்போம்!