ஹிந்தி, ஆங்கிலமா இது ஒரு அநீதி- அனிதாவிற்காக சூர்யா விளாசல்

surya-Aசூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் நடத்திவரும் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு கட்டாயத்தால் அனிதா மருத்துவம் படிக்க முடியாமல் இறந்து போனது அனைவருக்கும் பெரும் துயரத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார், இதில் ‘ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு, இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள்.

உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே என்பது அநீதியானது. ஆங்கிலம், இந்தி தவிர அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என்று கோபமாக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

-cineulagam.com