இளையராஜா பற்றி பேசி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்யாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்யாசம் காட்டப்படுவதில்லை என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “நாற்பதோ, ஐம்பதோ பண்ணுவது சுலபம். அவற்றில் எவ்வளவு ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்கவேண்டும்,” என கூறினார்.
ரகுமானின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரகுமானின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-cineulagam.com
தமிழ் நாட்டு மாக்களுக்கு எது முக்கியம் என்று விளங்காது. வெறுமனே மென்று கொண்டிருப்பதே வேலை. எவ்வளவோ முக்கிய வேலைகள் இருக்கிறது அதை பாருங்கள். மட ஜென்மங்கள்.
நண்பரே, உண்மைதான்! ஆனால் தமிழர்களின் பிரச்னையை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் ஊடகங்கள் போராடுகின்றன! அவர்கள் தமிழர்கள் இல்லையே!