மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த அனிதா தற்கொலை இப்போதும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பல பிரபலங்கள் அனிதாவுக்காக பேச இளையதளபதி விஜய் அண்மையில் அவரது வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த விஜய் என்ன பேசினார் என்பதை அனிதாவின் அண்ணன் மணிரத்னம் பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசும்போது, அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். நான் வந்தால் சூழ்நிலை சரியாக இருக்காது என்று வரவில்லை. எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள், அவள் இறந்துவிட்டாள், அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது.
அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவும் என் தங்கை தான், என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க, நான் செய்கிறேன், என்னிடம் கேட்க தயங்காதீர்கள் என்று ஒரு போன் நம்பரை கொடுத்து பணத்தை என் தந்தையிடம் கொடுத்தார்.
அதோடு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
-cineulagam.com


























