மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்.. ரஜினியை கூட்டணியில் சேர்க்கவும் ரெடி.. கமல் பரபர பேச்சு!

kamal01சென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில் கமல் தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பேசி வருபவர் கமல். சமீபத்தில் ஒரு வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், தான், அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவேன் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகை நிறுவன விழாவில் கமல் மீண்டும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்கள் விருப்பம்

கமல் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவது மக்கள் விருப்பம். மக்கள் விரும்பினால் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார். ‘ஒன்இந்தியாதமிழ்’ நடத்திய ‘போல்’ ஒன்றில் கமல் தனிக்கட்சி தொடங்க அதிகப்படியான வாசகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதேபோல சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ஆதரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கமல் இவ்வாறு கூறியுள்ளார்.

ரஜினியுடன் பேச்சுவார்த்தை

அரசியலுக்கு வந்த பிறகு, ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பின், எனது அணியில் இணைத்துக்கொள்ள தயார் என்றும் கமல் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் மூலம், ரஜினியுடன் இணைந்து அரசியல் கட்சியை உருவாக்க கமல் விரும்புவது தெரிகிறது.

பதவிக்காக நடிப்பு

கமல் மேலும் பேசுகையில், அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராடம் என்றார். மேலும், தனது வழக்கமான பாணியில் சமகால அரசியல் நிகழ்வை கேலி செய்யும் விதமாக “நான் தொழிலுக்காக நடிக்கிறேன்; சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

விவாதம்

கமல் பேச்சு ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தால், கமலுடன் இணைந்து செயல்படுவாரா, அல்லது, என் வழி தனி வழி என்று செல்வாரா என்பதெல்லாம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்தல்கள் ஆரம்பித்துள்ளன.

tamil.oneindia.com