சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக தமிழக அரசியல் குறித்து காரசார கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன்மூலம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
அவ்வப்போது ஊழல் ஆட்சி, முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் கமல் நேரடியாக தமிழக அரசை சாடி வருகிறார். இதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கட்சி தொடங்குவது உறுதி
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் கமல் நேர்காணல் அளித்தார். அதில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அவர் கூறினார்.
சினிமாவில் நடிக்க மாட்டேன்
தான் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். என் கட்சிக்கு மக்களே காசு தருவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
குற்றத்திற்கு பிராய்ச்சித்தம்
25 ஆண்டுகள் தான் செய்த குற்றத்திற்கு பிராய்ச்சித்தம் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் நடிகர் கமல் அந்நிகழ்ச்சியில் கூறினார். மேலும் அரசியலில் தான் ஒரு உதயமூர்த்தியாக செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பன்முகத்தன்மை கொண்ட நாடு
இந்து என்ற பெயரை இந்தியா மீது படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள்தான் சூட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரே இனம், ஒரே மொழி என்பதை தான் ஆதரிக்கமிட்டேன் என்றும் இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்துதானே ஆகணும்.
சுயநினைவும் சுயதரிசனமும் இல்லாதவன். இவன் சொல்வது இவனுக்கே புரியாது.
கமல் ஹாசனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பிறகு விமர்சிக்கலாம். நாம் யாரையும் மட்டம் தட்டுவது சரியல்ல– எப்போது ஒருவர் தன்னுடைய பேச்சை நடைமுறை ஆக்கவில்லையோ அப்போது செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் கேட்டு(GATE ) போட்ட பிறகு எப்படி?பஞ்சபாண்டவருக்கு தீயவனான துரியோதனன்,அவன் ஆட்சி செய்த நாட்டை மிகசிறப்பாக ஆண்டான்,என்கிறது மஹாபாரதம். நம்பிக்கை வைப்போமே!!
வேடிக்கையாக உள்ளது …..இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஆனால் அன்புமணி அல்லது சீமானுக்கு பலவாறான எதிர்ப்புகள் …சாதி வெறியன் , கிருதத்துவன் …….இன்னும் பல ….வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழகம் …….சினிமா வேறு அரசியல் வேறு என்று இன்னும் தமிழர்கள் அறியாமையில் உள்ளனர் …….அரசியல் கருத்து / விமர்சனம் செய்பவனெல்லாம் அரசியல் வாதியாக ஆகலாம் என்பது தமிழ் நாட்டில் மட்டுமே ……..
ஐயா thiagu அவர்களே- திறமை உள்ள எவருக்கும் சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை –ஆனாலும் ஒவ்வொருவரும் அவரின் திறமையை உறுதி படுத்தவேண்டும். அத்துடன் ஊழலுக்கு எவ்வளவு தூரம் என்றும் தெரிய வேண்டும்– தமிழ் காக்க -தமிழர் காக்க -நீதி காக்க – அறிவுள்ள – தலைவனாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற சமூகத்தினருக்கும் சம நீதி கொடுக்க வேண்டும்– ஆனால் அவர்களின் அடிவருடியாக இருக்க கூடாது. அதிலும் இப்போது இருக்கும் முதல் தலைகள் போல் வடக்கத்தியனுக்கு வால் பிடிக்காமல் இருக்க வேண்டும்.