நடிகர் திலகம் சிவாஜிக்கு அவமரியாதை… தமிழக அரசுக்கு எதிராக குடும்பத்தார் கடும் அதிருப்தி!

shivaji0சென்னை : நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக சிவாஜிகணேசனின் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது, இந்தப் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் சிவாஜிகணேசனின் 90வது பிறந்தநாளில் அக்டோபர் 1ம் தேதி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை வெளியான அரசு அறிவிப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. வந்து சிறப்பித்திருப்பார்

இந்த அறிவிப்புற்கு நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது மறைந்த ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இருந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிவாஜியின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தி இருப்பார்.

ஏமாற்றம்

சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை தமிழக அரசு திறக்க இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான். எனினும் முதல்வரோ, துணை முதல்வரோ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

அவமரியாதை

சிவாஜி தமிழ்த்திரைப்படங்கள் வழியாக கலாச்சாரம், தமிழ்மொழிக்கு சிறப்புன கேவையாற்றியவர். அப்படிப்பட்ட சிறந்தவருக்கான மணிமண்டப திறப்பு விழா சிறிய அளவில் நடத்தப்படுவது அவருக்கு செய்யப்படும் அவமரியாதை.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

முதல்வரும், துணை முதல்வரும் இதர அரசுப் பிரதிநிதிகளும் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

tamil.oneindia.com