சென்னை, நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை கோரி அப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தை பெரும் தொகையை முதலீடு செய்து தயாரித்துள்ளோம். ஆனால், அண்மை காலங்களில், இதுபோன்று தயாரிக்கப்படும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை, சட்டவிரோதமாக இணையதளத்தில் சிலர் வெளியிட்டு விடுகின்றனர். இதனால், தயாரிப்பாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக இணைய தளங்களில் ‘மெர்சல்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ‘மெர்சல் திரைப்படத்தை வெளியிட 2 ஆயிரத்து 650 இணையதளங்களுக்கு தடைவிதித்து’ நேற்று உத்தரவிட்டார்.
-dailythanthi.com

























