முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. கேளிக்கை வரியை எட்டு விழுக்காடு குறைத்ததற்கும், திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தற்கும் நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.
அதேநேரத்தில், மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் இருப்பதால், அதற்கு முதலமைச்சர் உதவுமாறு, நடிகர் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-nakkheeran.in
























