சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். ‘ராகவேந்திரா’ படத்தில் ராகவேந்திரராகவே நடித்துள்ளார். பாபாஜியின் தீவிர பக்தராகவும் இருக்கிறார். அவர் நடித்த ‘பாபா’ படத்தில் இமயமலை சென்று ஞானம் பெறுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன.
ஆண்டுதோறும் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதுவரை 6 தடவை இமயமலைக்கு சென்று வந்து விட்டார். இமயமலை பயணத்தின்போது காவி வேட்டி கட்டிக் கொள்வார். தெருவோர கடைகளில் உணவு வாங்கி நின்று கொண்டு சாப்பிடுவார். தரையில் துண்டை விரித்து படுத்து தூங்குவார்.
இமயமலையில் பாபாஜி குகையை வழிபட வரும் பக்தர்களுக்கு ஓய்வெடுக்கவும் தங்குவதற்கும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு தியான மண்டபமும் ஓய்வு அறையும் கட்டிக்கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்தார். தனது நெருக்கமான நண்பர்கள் 7 பேருடன் இணைந்து பாபாஜி குகை அருகில் இடம் வாங்கி அதில் தியான மண்டபம் கட்டி உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள துவாகராட் என்ற இடத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. ரூ.1 கோடி செலவில் இந்த தியான மண்டபம் உருவாகி உள்ளது. பரமஹம்ச யோகானந்தர் நிறுவிய சத்சங்க் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு அமைப்பிடம் தியான மண்டபத்தை ஒப்படைத்து உள்ளார்.
தியானமண்டபத்தில் 30–க்கும் மேற்பட்டோர் தங்கிக்கொள்ளலாம். தியானமும் செய்யலாம். இந்த மண்டபத்தின் திறப்புவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10–ந்தேதி நடக்கிறது என்று அதன் அறங்காவலர் வக்கீல் விஸ்வநாதன் அறிவித்து உள்ளார்.
-dailythanthi.com
வாழ்க வளர்க உமது ஆன்மிக தொண்டு ! மகிழ்ச்சி .
இமயமலையில் பாபாஜி குகையை வழிபட வரும் பக்தர்கள் தமிழ்நாட்டில் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாத ஏழைகளை விட பரம ஏழைகள் என்பதால் இமயமலையில் தியான மண்டபம் கட்டினாரா இந்த சூப்பர் ரஜினிகாந்த்…
வாழ்க அவரின் சமூகத் தொண்டு..
ஓவ்வொரு படம் முடிந்து வீட்ட நிலையில் இதுவரை 6 தடவை இமயமலைக்கு சென்று வந்து விட்டார் ஞானம் பெற..! போய் வந்து விட்ட பிறகும் இளவயதுகளுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போடுகிறாரே? இன்னும் முழுமையான ஞானம் பெறவில்லையோ…?
மேல்புறத்தில் இனிப்பு கீழ் புறத்தில் கசப்பு இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு…
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் அழுகை வல்லே..அழுகிறேன் அழுகிறே சிரிப்பு வல்லே..
அடுத்தவன் மற்றவர்கள் நண்மை கருதி செய்யும் நல்ல செயல்களை கூட பாராட்ட மனம் இன்றி குற்றம் கண்டுபிடித்தே வாழ்பவருக்கும் ! மற்றவர் வளர்ச்சியில் வயித்தெரிச்சல் படுபவனுக்கும் ! சிரித்தாலும் சிரிப்பு வராது ! அழுதாலும் அழுகை வராது ! மன உளைச்சலும் ! மற்றவர் மேல் வெறுப்பும் ! விரக்தியும் தான் வரும் ! வழிப்போக்கர்களுக்கு வீட்டின் முன்புறத்தில் திண்ணை கட்டி வாழ்ந்தவன் தமிழன் !!
அதில் அவருக்கு ஒரு மன நிறைவு. அதனை நாம் குறை சொல்லுவது சரியல்ல!
மாற்றுக் கருத்தாளர்களின் எண்ணம் புரிகிறது. நாம் அதரவு கொடுக்க கொடுக்க இந்த மாதிரி ஆ’சாமி’கள் உருவாவார்கள். ஆதரவுக் கரங்களுக்கு நன்றிகள் பலப் பல. மற்றபடி மன உளைச்சலும் வயித்தெரிச்சலும் என்னோடு இருக்கட்டும். ஆன்மீகம் அல்லவா? பத்து ஏழைகளின் பசியாற்றுவதை விட இந்த மாதிரி ‘தியான’ மண்டபங்கள் மிக மிக அவசியம் தான். ஏன்’னா ஆன்மிகம் பற்றி மாற்றுக் கருத்தைச் சொன்னால் சாமி கண்ணைக் குத்திவிடுமே…
ஐயா கரு தமிழ்ச்செல்வன் அவர்களே — நான் ரஜினி விசிறி அல்ல பெரும்பாலான ரஜினியின் படங்களை நான் பார்ப்பது கூடஎ கிடையாது– ஆனாலும் ரஜினி யாருடன் ஆடினாலும் அவரை அப்படி கூறுவது தவறு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவரால் முடிகிறது- அதையும் பெரும்பாலான தமிழ் மாக்கள் ஆதரவு கொடுத்து -அட்டைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது யாருடைய தவறு?
ஏமாரும் தமிழன் வாழும் வறை, தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பான். உலகிலேயே பெயரைக்கேட்டவுடன் கைத்தட்டும் மனிதர்களை த.நா.டில் தான் பார்க்க முடியும்.