சென்னை : ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியதற்க்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து, நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நன்றி தெரிவித்தார். சென்னையில் முதல்வரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், ஏஆர் ரஹ்மான், சூர்யா, விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நன்கொடை கொடுத்துள்ளதாகவும் கூறினார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றிய விழிப்புணர்வு திரையுலகில் பரவலாக ஏற்பட்டுள்ளதால், இன்னும் நிறைய பேர் நிதி உதவி செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு பயணம் செல்ல முயற்சிகள் எடுத்துவருவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு வழங்க விரும்புவதாகவும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டார்.
தமிழக அரசு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார்கள். மேலும் தேவைப்படும் தொகைக்கு உரிய முயற்சி எடுக்க இருப்பதாகவும் முதல்வரும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி என்றும் ஜிவி பிரகாஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக 9.75 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் தேவைப்படும் தொகைக்கு உரிய முயற்சிகள் செய்வதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். விரைவில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-tamil.filmibeat.com
நம் நாட்டு தமிழர்களின் பங்களிப்பும்
இருக்க வேண்டும்,அதற்க்கான முயற்சியை
பொதுநல ஆர்வளர்கள் முன்னெடுக்க
வேண்டுகிறேன்,நான்100வெள்ளி
நன்கொடை அளிக்கத்தயார்,
நானும் கொடுக்க தயார்.