தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது
தமிழகத்தில் உள்ள குளங்கள், ஏரிகளைச் செப்பனிடவும் அவை நல்ல நிலையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் எனது நற்பணி மன்றத்தினர், நண்பர்கள் மற்றும் நிபுணர்கள் என 5 லட்சம் பேரை விவசாயிகளிடம் அனுப்பி வைக்க உள்ளேன் என்று கூறினார்.
இந்த நிலையில் கமல் தன் டுவிட்டரில்,
“அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்”. என கூறியுள்ளார்.
-dailythanthi.com


























super sir