கிட்டத்தட்ட தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் வடிவேலு.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் ஏராளமாக குடைச்சல்கள் கொடுத்த வடிவேலுவால் படப்பிடிப்பு தடைப்பட்டதோடு படமே ட்ராப் ஆகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
எனவே கடுப்பான தயாரிப்பாளர் ஷங்கர் உங்க சங்காத்தமே வேண்டாம் என்று வாங்கிய அட்வான்ஸ் 3 கோடியை திருப்பி கேட்கிறாராம். அதற்கும் வடிவேலுவிடம் பதில் இல்லாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
வடிவேலு இந்தப் படத்தில் நடிக்க மறுக்கும் பட்சத்தில் ரெட் கார்டு போடப்படலாம். அப்படி ஒன்று நிகழ்ந்தால் அதோடு வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே முடிந்துபோய்விடும் வாய்ப்புகள் உண்டு.
நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் ஜெயிக்க வடிவேலுவும் உதவி செய்தார். நேரடியாக ஆதரவு தெரிவித்து பேசினார்.
விஷால் நடிகர் தொடர்பான பஞ்சாயத்துகளில் தலையிடுவதே கிடையாது. தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரித்திஷ், கருணாஸ் போன்றோர்கள் மீதே கவலைப்படாமல் நடவடிக்கை எடுத்த விஷாலுக்கு வடிவேலு எம்மாத்திரம்? எனவே வடிவேலு மீது நடவடிக்கை உறுதி என்கிறார்கள்.