முன்னணி சினிமா நடிகர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபடவுள்ளதாக ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரணை செய்யும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்ற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர்.
ஆரம்பத்தில் அமைதியாக நடந்த போராட்டம் இறுதியில் தடியடியில் முடிந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தற்போது விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் மற்றும் கருத்து தெரிவித்த பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை கமிஷன் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விஜய், RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி என பலரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
-cineulagam.com