அரசியல் இருக்கட்டும் முதலில் சினிமா துறையை திருத்திக் காட்டுங்க ரஜினி, கமல்

சென்னை: சினிமாவில் திருத்த வேண்டியது நிறைய இருக்கும்போது ரஜினியும், கமலும் அரசியலை திருத்த கிளம்பிவிட்டார்கள் என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

சிஸ்டம் சரியில்லை என்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்கிறாரே தவிர எப்பொழுது வருவேன் என்பதை மட்டும் தெளிவாக சொல்லவே மாட்டேன் என்கிறார். அரசியலுக்கு வர தற்போதைக்கு அவசரமில்லை என்று வேறு கூறியுள்ளார்.

கமல் ஹாஸனோ நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்கிறார். ஆனால் அது ஆன்லைனோடு நிற்கிறது.

தற்கொலை கந்துவட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஜாம்பவான்களான ரஜினியும், கமலும் அன்புச்செழியன் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

மவுனம்

கமலாவது அன்புச்செழியன் பெயரை போடாமல் ஏதாவது ட்வீட் போட்டார். ரஜினியோ சத்தமே இல்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

ரஜினி

தமிழ் சினிமாவில் அண்மை காலமாக மெகா பட்ஜெட் படங்கள் அதிகரித்து வருகின்றது. அதில் ரஜினியின் படம் தான் பட்ஜெட்டில் உச்சம் தொட்டுள்ளது. அஜீத், விஜய்யின் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களாக மாறிவிட்டன.

அரசியல்

சினிமா துறையில் இத்தனை ஆண்டுகளாக இருக்கும் ரஜினி, கமல் ஹாஸன் நாட்டை திருத்த அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருக்கும் சினிமா துறையில் திருத்த வேண்டியது நிறைய உள்ளது.

சுத்தம்

அன்புச்செழியன் செய்யும் அடாவடி தெரிந்தும் கமலும், ரஜினியும் வாய்ஸ் கொடுக்காமல் உள்ளார்கள். அவர்கள் நினைத்தால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன?. நாட்டை திருத்த திட்டமிடுபவர்களுக்கு கந்துவட்டி பிரச்சனை எல்லாம் எம்மாத்திரம்?

முதலில்

அரசியல் சிஸ்டத்தை பிறகு சரி செய்து கொள்ளலாம். முதலில் வீணாகப் போய் கிடக்கும் சினிமா சிஸ்டத்தை ரஜினி, கமல் கை கோர்த்து சரி செய்தால் புண்ணியமாக இருக்கும். அப்படி அவர்கள் செய்தால் அரசியலிலும் அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கும் வரும். செய்வார்களா?

tamil.filmibeat.com