விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் ஜூலை மாதம் வெளிவந்த சூப்பர்ஹிட்டான படம் விக்ரம் வேதா. இந்த வருடத்திலேயே தமிழில் வெளிவந்த சிறந்த படம் என்ற பெயர் வாங்கியது.
இதனிடையே பல பிரபலமான விருதுவிழாக்களில் கலந்து பாராட்டுக்களையும் பெற்றது விக்ரம் வேதா
இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உலக புகழ்பெற்ற சினிமா இணையதளம் IMDB யில் 2017ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த பத்து படங்கள் என்ற லிஸ்டில் விக்ரம் வேதாவுக்கு முதலிடம் கொடுத்து மாபெரும் கெளரவம் சேர்த்துள்ளது. பாகுபலி (Conclusion)க்கு இரண்டாம் இடம் , அர்ஜுன் ரெட்டிக்கு 3வது இடம் மற்றும் விஜயின் மெர்சலுக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

























