மக்களை ஈர்த்த பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைத்த பரிசு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்களை நடித்து கொடுப்பவர். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அவர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் வரும் ஜனவரி 26 ல் வெளியாகவுள்ளது. சில சமூக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வரும் அவர் நல்ல விசயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு தந்தை பெரியார் விருதை பெரியார் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்காக இது வழங்கப்படுகிறது.

இதில் மேலும் நடிகர் பார்த்திபன், இயக்குனர் கோபி நயினார் ஆகியோருக்கு மட்டுமில்லாமல் மற்ற துறை சார்ந்தவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

-cineulagam.com