சென்னை: நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசு குறித்தும் அரசின் நிர்வாகம் குறித்தும் டிவிட்டரில் விமர்சனம் செய்து வந்தார். அவரது விமர்சனங்களுக்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்து ரசிகர்களிடையே உரையாற்றினார்.
இனி நற்பணி நாயகர்கள்
அப்போது 35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள், இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் என்றார். நற்பணிகளின் நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகின்றனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது
நற்பணி வேலைகளின் வீச்சு அதிகமாக போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விட்டதாகவும் அதனை விரைவில் செயல்படுத்த போவதாகவும் அவர் கூறினார்.
தள்ளப்பட்டுள்ளோம்
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் கூறினார். நற்பணிகளில் மேலும் பல இணைய உள்ளனர் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுவரை திட்டமிடவில்லை
மேலும் பிப்ரவலி 24ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அதுவெறும் புரளி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். பிப்ரவரி 24 ஆம் தேதி எந்த நிகழ்ச்சி குறித்தும் இதுவரை திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.
மக்களை சந்திக்க திட்டம்
பிப்ரவரி 21,22 மற்றும் 23ம் தேதிகளில் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களை சந்திக்கலாம் ஆனால் அவர்கள் என்ன கோடம்பாக்கதிலா இருக்கிறார்கள்? கடைசியில் பா.ஜ.க.வில் சங்கமம்!