வடிவேலு மீது போலீஸ் நிலையத்தில் ஷங்கர் புகார்?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. இவர் ஹீரோவாக நடிக்க துவங்கி நல்ல படங்கள் கொடுத்துவந்த நிலையில் அரசியலில் குதித்தார். அதன் பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது.

அவர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக தெரிகிறது.

அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட கோரி இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. அதனால் காவல்துறையிடம் புகார் அளிக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“எங்கள் நோக்கம் அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம்” என படக்குழு தெரிவித்துள்ளது.

-cineulagam.com