நடிகை ஸ்ரீதேவி சற்று முன் காலமானார் ! இந்திய திரை உலகமே அதிர்சி கடலில் மூழ்கியுள்ளது

பாலிவுட் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி(54) சற்று முன்(சனிக்கிழமை நள்ளிரவு 11.30) க்கு மாரடைப்பால் காலமானார்.

மோர்ஹிட் மார்வா (நட்சத்திர நடிகர்) திருமணம் ஐக்கிய அரபு எமரேட்சில் (UAE) நடைபெற்றது. அத்திருமண விழாவில் கலந்துகொள்ள நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூர், மற்றும் மகள் சகிதம்  அவர் ஐக்கிய அரபு சென்றிருந்தார். விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஹோட்டலுக்கு திரும்பிய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன்.

அவர் அருகே அவரது மகள், மற்றும் கணவர் போனி கபூர் ஆகியோர் உடன் இருந்துள்ளார்கள் என்று போனி கபூரின் தம்பி சஞ்செய் கபூர் செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார். நடந்த திருமண விழாவில் நடிகை ஸ்ரீதேவி அதிக மது அருந்தி இருக்கவேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் ரிவிட்டரின் செய்தி வெளியிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்ரீதேவை கடும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. எது எப்படி இருந்தபோதும், ஈடு இணை இல்லாத ஒரு பெரும் நடிகை என்றால் அது ஸ்ரீதேவியாக தான் இருக்க முடியும். கமல் ஸ்ரீதேவி , ரஜனி ஸ்ரீதேவி கூட்டு நடிப்புகளில் வெளியான பல திரைப்படங்கள் வைர விழாவை சந்தித்து எட்டாத இடத்தை பிடித்திருந்தது. அதுபோக அவர் பாலிவுட்டிற்கு நடிகச் சென்று தனக்கென்று நீங்காத ஒரு இடத்தைப் பெற்றிருந்தார்.

சில மனச் சங்கடங்கள் அவரை வாட்டியதால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். நீண்ட வருடங்களாக  அமைதி இல்லாத அவர் வாழ்க்கையில் இனியாவது அமைதி கிட்டி,  நித்திய வாழ்க்கையை பெற்று சாந்தியடைய வேண்டும்.

-cineulagam.com