மயிலு, விஜி என பல கதாபாத்திரங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மரணம் இந்திய சினிமாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நேற்று துபாயில் இறந்த அவரது உடல் இன்று மாலை 8 மணியளவில் மும்பை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரது திடீர் மரணத்திற்கு காரணம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக பேச்சு கிளம்பியது.
ஸ்ரீதேவி கடந்த மாதம் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக செய்திகள் வெளியாகின. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரின் உதடுகள் விகாரமாகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் தீயாக பரவியது.
இப்படி அழகை மெருகூட்ட அவர் செய்த பிளாஸ்டிக் சர்ஜரிகள் தான் அவரது உடல் நலத்திற்கு கேடு விளைவித்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-cineulagam.com