தன் நடிப்பால் பலரையும் மகிழ வைத்த வடிவேலுவுக்கு இத்தனை கோடி அபராதமாம்!

தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. இவரது காமெடி காட்சிகளை எப்போது பார்த்தாலும் புதியாக பார்ப்பது போலவே சிரிப்புகள் வரும்.

இவர் ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. 2006 ல் சிம்பு தேவன் இயக்கத்தில் சங்கர் தயாரிப்பில் உருவானது. இதன் அடுத்த பாகத்திற்கான வேலைகள் சில மாதங்களுக்கு முன் ரூ 6 கோடி செலவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட இருந்தது.

ஆனால் வடிவேலு தனது வேலையை நிறுத்திக்கொண்டார். ஆனால் அவர் திரைக்கதை விசயத்தில் தலையிடுவதாகவும், கொடுக்கும் உடைகளை அணியமறுப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த சர்ச்சைகள் நீடித்ததால் பட வேலைகள் கிடப்பில் இருந்தது. மேலும் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாவிட்டால் அட்வான்ஸ் ரூ 1.50 கோடி, செட் போட்ட செலவு எல்லாம் சேர்த்து ரூ 9 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என முடிவுசெய்துள்ளார்களாம்.

படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலேயே இருந்த வடிவேலு தற்போது தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் படம் தொடங்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

-cineulagam.com