ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்து நடந்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ‘தமிழ் படித்தால் முன்னேற முடியாது, தமிழன் முன்னேறினால் தான் தமிழுக்கே பெருமை’ என்று மறைமுகமாக சீமானுக்கு ரஜினி பதிலடி கொடுத்தார்.
இதற்கு சீமான் இன்று ‘ஏன் இதை இவர் கன்னடம் படித்தால் முன்னேற முடியாது என்று சொல்ல முடியுமா?, கர்நாடகாவில் இப்படி சொன்னால் இவரை சும்மா விடுவார்களா, அவர்கள்’ என சீமான் வெளுத்து வாங்கிவிட்டார்.
-cineulagam.com
ரஜினி ஒன்றைத் தெளிவாக சொல்லிவிட்டார். தமிழ் நாட்டில் தமிழ் தேவை இல்லை என்று பதவிக்கு வரும் முன்னே சொல்லுகிற இவரை ஆதரிப்பவர் யார்? தமிழரா? நிச்சயமாக இல்லை! தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தான் இவருடைய ஆதரவாளர்கள்! ஊடகங்கள் அவர்களின் பக்கபலம்! அதனைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன் படுத்துகின்றனர்!
தமிழ் நாட்டில் ,தமிழ் கட்டாய பாடமில்லை என்கிறார்களே ! அதற்க்கு இந்த சீமான் என சொல்கிறான் ! நடிகன் நாடாளக்கூடாது என்று ! குஸ்பு உடன் கூத்தடிக்கிறானே ஏன் ! ரஜினியை நோண்டாமல் எவன் தமிழ் நாட்டில் அரசியல் நடத்த முடியாதோ !!
தமிழகத்தில் தமிழ் தேவையில்லை என எவன் கூறுகின்றானோ அந்த பச்சோந்தியின் குணத்தை மனதை தமிழர்கள் உணரவேண்டும் .வேற்றுமாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தமிழை கொண்டு தமிழ் ரசிகர்களை கொண்டு பிழைக்க வந்த ஒரு நடிகன் தைரியமாக இப்படி கூற முடிகிறது எனில் அதற்கு மூல காரணம் தமிழர்களிடேயே இல்லாத ஒற்றுமையே .தமிழர் ஒன்றுபட்டால்தான் தமிழும் வாழும் தமிழரும் முன்னேறுவர் .
வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒரு கன்னடனால் தமிழ் நாட்டில் தமிழ் வேண்டாம் என்று சொல்ல முடிகிறதென்றால் அது தமிழ் நாட்டுக்குப் பிழைக்க வந்த தெலுங்கன், கன்னடன், மலையாளி அத்தோடு பிராமணத் தெலுங்குக் கூட்டம் இவர்கள் கொடுத்த தைரியம் தான். ஏன், ரஜினியால் கர்நாடகாவில் போய் கன்னடம் வேண்டாம், ஆங்கிலம் போதும் என்று சொல்ல துணிவு இருக்கிறதா? உடனே அங்கிருந்து விரட்டி விடுவார்கள்! தமிழனின் தாராள குணத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.