நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் சினிமாவை தாண்டி சில விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்த விஷயங்களை செய்து வருகிறார். நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறார். இவரை போல் மற்ற நடிகர்கள் செய்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான்.
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த கதிரவன் குணசேகரன் என்பவர் விளையாட்டு துறையில் நிறைய சாதனைகள் செய்து வருகிறார். மாநில மற்றும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார். இப்படி பல சாதனைகள் செய்து வரும் இவருக்கு இதுநாள் வரை நிறைய விஷயங்களில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தான் உதவி செய்து வருகிறாராம்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஜி.விக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-cineulagam.com


























நன்றி, பிரகாஷ்! முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கு உதவும் போது தான் முடியாதவர்களும் பிரகாசிப்பர். திட்டம் போட்டு தமிழர்களுக்குத் துரோகம் செய்த திருடர்களுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். நன்றி, தொடர்க!