சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. நேற்று மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவையில்லை இது எங்களின் போராட்டம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு உலக நாயகன் கமல் ஹாஸன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இதுவரை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆதரவு
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துள்ளார்.
-tamil.filmibeat.com


























தமிழன் என்கிற உணர்வு உள்ளவர்களுக்கு துணிவு வரத்தான் செய்யும். குரல் கொடுக்கத்தான் செய்வர். நன்றி பிரகாஷ்!