சினிமா நடிகர்கள் நாட்டை ஆள விடக்கூடாது – நடிகர் விக்னேஷ் ஆவேசம் !

இன்று காவிரி மீட்புக் குழுவின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் கல்லணையில் நடக்கும் காவிரி உரிமை மீட்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏராளமான திரைத்துறையினர் கலந்து கொண்டனர். இதில் பாரதிராஜா , சீமான், வெற்றிமாறன். ராம். அமீரை போன்ற பிரபல இயக்குனர்கள் வந்தனர் .

இவ்விழாவில் நடிகர் விக்னேஷ் மேடையில் பேசும்போது , நடிகர்கள் நம்மை ஆளக்கூடாது அதற்கு விட்டுவிடக்கூடாது. அவர்கள், டைரக்டர் எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசித்தான் நடிகர் ஆனார்கள். சரியாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். நம்மை ஆள யார் சிறந்த தலைவன்,என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தமிழர் பண்பாடு பாரம்பரியத்தைத் தெரிந்தவர்களைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நானும் நடிகன் தான். ஆனால் நான் எனது ஊரில் 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். வயலில் உள்ள தென்னைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைக்கு சோறு இல்லையெனக் கவலைப்படுவது போல இப்போது தண்ணீர் இல்லாமல் காயுது. அதை நாம் சரி செய்ய வேண்டும். மாநில அரசு, எடுபிடி அரசாக உள்ளது. இவர்கள் கேன்சர் விசக் கிருமிகள் தூக்கி எறிய வேண்டும்” கூறினார்.

-cineulagam.com