ட்விட்டரில் ஒரேயொரு ஹேஷ்டேக் போட்டதால் பிரகாஷ் ராஜுக்கு வந்த பிரச்சனை

பெங்களூர்: பாஜகவை விமர்சிப்பதால் நடிகர் பிரகாஷ் ராஜ் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ் கோலிவுட்டை போன்றே பாலிவுட்டிலும் பிரபலமானவர். இந்நிலையில் பாலிவுட்காரர்கள் பிரகாஷ் ராஜுக்கு பட வாய்ப்பு கொடுப்பதை மெல்ல மெல்ல நிறுத்தியுள்ளனர்.

அதற்கு காரணம் அவர் பாஜக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்பது என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரகாஷ் ராஜ் கூறியதாவது,

பட வாய்ப்பு

நான் பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்கத் துவங்கியதும் பாலிவுட்காரர்கள் எனக்கு பட வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டனர். கேள்வி கேட்பதால் என்னை குறி வைக்கிறார்கள்.

படங்கள்

தென்னிந்திய படங்களில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போன்று வாய்ப்புகள் கிடைக்கின்றது. என்னை ஏழை ஆக்கும் அளவுக்கு அவர்களுக்கு சக்தி இல்லை.

சக்தி

என்னிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது. மேலும் இனியும் சம்பாதிக்கத் தேவையான தெம்பு உள்ளது. அவர்களால் என்னை தடுத்து நிறுத்த முடியாது என்கிறார் பிரகாஷ் ராஜ்.

ஜஸ்ட் ஆஸ்கிங்

பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் #justasking என்ற ஹேஷ்டேக் போட்டு மத்திய அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். தனது தோழியான மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகே பிரகாஷ் ராஜுக்கு பாஜகவுடன் பிரச்சனை ஏற்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com