கமல் மீது திசை திரும்பும் ஈழத்தமிழரின் கோபம்!

காலா படத்துக்கு தடை விதித்தது தவறு என்றும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வரும் காலா திரைப்படம் தடைகளை தாண்டி வெற்றி பெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று (04.05.2018) பெங்களுருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இதனையடுத்து தற்போது சென்னை திரும்பியுள்ள அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசுகையில், காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியது தீர்ப்புதான். மாநிலங்கள் ஒற்றுமையாக இருக்க எல்லோரும் உதவி செய்யலாம். நல்ல நோக்கத்திற்காக தான் கர்நாடக சென்று முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த பிரச்சனை இருந்து வந்தது. தற்போது வென்றிருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் அரசியல் களத்தில் நான் குழந்தை தான் என கூறிய அவர், காலா படத்துக்கு தடை விதித்தது தவறு, தடையை வென்று காலா படம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடந்து முடித்த தூத்துக்குடி துயரத்தின் போது ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழக மக்களும், குறிப்பாக ஈழத்தமிழர்கள் அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ள நிலையில் தற்போது கமல் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது ஈழத்தமிழர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கோபமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://athirvu.in