கஜா புயல் எதிரொலி : அணைகளை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

கஜா புயலின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகைக்கு வடகிழக்கே 820 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.

வரும் 15ஆம் தேதி முற்பகல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்றும், “தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் புதுச்சேரி, காரைக்கால்” ஆகிய மாவட்டங்களில்  “மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும்,

“கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்றும், “தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி”  “ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்”  “ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,   கஜா புயலின் காரணமாக, தமிழகத்தின் பலபகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதன் காரணமாக, வைகை, சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, பவானிசாகர், அமராவதி உள்ளிட்ட அணைகளை வரும் 16 முதல் 18 வரை தீவிரமாக கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.