கடந்த 25 ஆண்டுகளாக மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, பேரவைக்கதைகள் எனும் தேசிய அளவிலானச் சிறுகதை எழுதும் போட்டியினை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அவ்வகையில், இவ்வாண்டு 26ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இப்போட்டியினை மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, தமிழ் நெஞ்சர்கள் அனைவரும் இப்போட்டிக்கு சிறுகதை எழுதி ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்போட்டி பொதுப்பிரிவு, மாணவர் பிரிவு என இரு பெரும் பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. பொதுப்பிரிவில் மலேசியத் தமிழர்கள் வயது வரம்பின்றி பங்கு பெறலாம். மாணவர் பிரிவில் உயர்க்கல்விக்கூடங்களிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
கதைப் படைப்பு, தொலைப்பேசி எண், முழு முகவரி ஆகியவற்றோடு எழுத்தாளர்கள் தங்களின் அடையாள அட்டை நகலையும் மற்றும் மாணவர்கள் தங்கள் சார்ந்துள்ள கல்விக்கூடத்திற்கான சான்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். போட்டிக்கான இறுதி நாள் 10.1.2012 ஆகும்.
பரிசு விபரம் :
பொதுப்பிரிவு மாணவர் பிரிவு
*முதல் பரிசு: ரி.ம.1500.00 *முதல் பரிசு: ரி.ம.1500.00
*இரண்டாம் பரிசு: ரி.ம.1000.00 *இரண்டாம் பரிசு: ரி.ம.1000.00
*மூன்றாம் பரிசு: ரி.ம.500.00 *மூன்றாம் பரிசு: ரி.ம.500.00
*ஒன்பது ஆறுதல் பரிசுகள்: ரி.ம.200.00 *ஒன்பது ஆறுதல் பரிசுகள்: ரி.ம.200.00
போட்டிக்கான விதிமுறைகள்:
• சிறுகதைக்கானத் தலைப்பு பொதுவானது.
• சிறுகதைகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே அச்சில் வெளிவந்ததாக இருக்கக் கூடாது.
• சிறுகதைகள் கையெழுத்தாக இருப்பின் 7-9 பக்கங்களிலும், கணினி தட்டச்சாகின் 4-5 பக்கங்களிலும் இருக்க வேண்டும். எழுத்து அளவு 12. வரிகளுக்கான இடைவெளி 1.0 ஆகும்.
• போட்டியாளர்கள் தங்கள் கதைகளைக் குறுந்தட்டில் பதிவு செய்து அனுப்புவதும் வரவேற்கப்படுகிறது.
• எழுதப்பட்ட சிறுகதை பேரவைக்கதைகள் போட்டிக்காக தானே சுயமாக எழுதியது என்று போட்டியாளரின் கையொப்பமிடப்பட்ட உறுதிக் கடிதம் ஒன்றை உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
• போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எழுத்தாளர்கள் தமிழ்ப் பேரவையினரையோ, இந்திய ஆய்வியல் துறையினரையோ எவ்வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது.
• நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும் ஆகும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ANTOLOGI CERPEN KE-26
PERSATUAN BAHASA TAMIL UNIVERSITI MALAYA
D/A JABATAN PENGAJIAN INDIA
FAKULTI SASTERA DAN SAINS SOSIAL
UNIVERSITI MALAYA
50603 KUALA LUMPUR
தொடர்புக்கு: சரஸ்வதி மகாலிங்கம் 019-5299162