மரத்தில் விமானத்தை நிறுத்திய விமானி!

இந்த விமானிக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம் தான். 80 வயதான அந்த விமான ஓட்டி தவறான இடமொன்றில் விமானத்தை நிறுத்தியுள்ளார்.

அது வேறு எங்கும் அல்ல 40 அடி உயரமான மரத்தில்.. உடனடியாக அவசர உதவிப் போலிசார் சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் போலந்து நாட்டில் உள்ள Wielmoza என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தற்செயலாக நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானிக்கு விமானத்துக்கோ பெரிதாக எந்தச் சேதமும் ஏற்படவில்லை.