தமிழக மற்றும் இந்திய தேர்தல் முடிவு: சீமான் 3வது அணியாக உருவெடுப்பு…

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் சுமார் 37 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த முதல் தேர்தலில் அவர் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார் என்பது தெரிகிறது. இதில் இருந்து அடுத்து வரவுள்ள தமிழக தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதலமைச்சராக வர பெரும் வாப்புகள் உள்ளது.

இதேவேளை படு தோல்வியை தழுவிக்கொண்ட அதிமுக, பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. நடிகர் கமலஹாசனின் மக்கள் மையம் கட்சி பெரும் தோல்வியை அடைந்துள்ள நிலையில். அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி 9% சதவீகித வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பட்டி தொட்டி தொடக்கம், நகரங்கள் வரை வாக்குகள் விழுந்துள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் 3ம் சக்தியாக நாம் தமிழர் அமைப்பு உருப்பெற்றுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழகத்தில் 37MP க்களை வைத்திருக்கும் தி.மு.க மத்தியில் திணறும் நிலை தோன்றியுள்ளது. காரணம் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி ஏனைய மாநிலங்களில் பெரும் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் நரேந்திர மோடியின் ப.ஜ.க பெரும் பலத்தோடு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் தி.மு.காவிற்கு மத்தில் செல்வாக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.

-athirvu.in