இதே நாளில் அன்று

ஜனவரி 5, 1955
மம்தா பானர்ஜி: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா, அஸ்ரா என்ற இடத்தில், 1955, ஜன., 5ல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர், 1970ல், அரசியல் வாழ்வை, காங்கிரசில் துவங்கினார். 1997ல், காங்கிரசிலிருந்து பிரிந்து, ‘அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற கட்சியை துவக்கினார். 1999ல், பா.ஜ., தலைமையில் மத்திய அமைந்த, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். 2001ல், ஆளும் கூட்டணியுடன் பிணக்கு ஏற்பட்டு, தன் பதவியை துறந்தார். 2004ல், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த, 2009ல் காங்கிரசுடன், திரிணாமுல் கூட்டணி அமைத்து, ரயில்வே துறை அமைச்சராக, இரண்டாம் முறையாக பதவியேற்றார். 2011ல், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த, இடதுசாரி முன்னணி அரசை வீழ்த்தி, 2011ல் மேற்குவங்க முதல்வராக பொறுப்பேற்றார். 2016ல் நடந்த, இரண்டாவது சட்டசபை தேர்தலிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வென்று, இரண்டாவது முறையாக மேற்குவங்க முதல்வராக பொறுப்பேற்றார்.

மம்தா பானர்ஜி பிறந்த தினம் இன்று.