ஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை

இந்தியாவில் கடந்த ஓராண்டில் (2018) 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் அடிப்படையில்; மஹாராட்டிராவில் ம் (17,972 பேர்) முதலிடம், தமிழ்நாடு (13,896 பேர்), 2-ம் இடம், மே. வங்கம் 3ம் இடம் (13,225 பேர்), ம. பிரதேசம் 4-ம் இடம் (11,775 பேர்), கர்நாடகம் 5-ம் இடம் (11,561 பேர்) .

விவசாயம் தொடர்பான நபர்கள் 10,349 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்த பெண்கள் 42,391, பொதுத்துறை ஊழியர்கள் 2,022 பேர், மாணவர்கள் 10,159 பேர், அரசு ஊழியர்கள் 1,707 பேர் , தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர் , தற்கொலை செய்துள்ளனர்.