புதுடில்லி: வெங்காய வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, வெங்காய விலைவிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும்15-ம் தேதியில் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
dinamalar