இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கவும் அனுமதித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவினங்கள் மற்றும் நிவாரணத்தொகையாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

பேரிடர்களை எதிர்கொள்ளும் செலவினங்களுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பயனாளிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கலாம்? என்பதை நிர்ணயிக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

maalaimalar