இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்கொள்கிறது : மோடி

புதுடில்லி: இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது என பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

கொரோனா வைரசை தடுப்பது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். கொரோனா வைரஸ் உலகப்போர் போல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக உலகம் போராடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது .130 கோடி மக்களும் கொரோனாவை குறித்தே பேசுகின்றனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போரை காட்டிலும் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டும். வரும் சில வாரங்கள் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.மார்ச் 22 ஆம் தேதி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். ஊரடங்கு நடைமுறையை பினபற்றுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar