பல்கலை தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவு  

புதுடில்லி: கோரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, நாடுமுழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி(பல்கலைக்கழக மாணிய ஆணையம்) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே திட்டமிட்ட செமஸ்டர் தேர்வுகளையும், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மார்ச் 31க்கு பிறகு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச்-31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamalar