வைரசை உடலில் ஒட்ட விடாத அந்த 14 மணி நேரம்- மோடி அறிவித்த சுய ஊரடங்கின் சூட்சுமம்

இந்தியாவில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்ததின் சூட்சுமம் என்னவென்று பார்ப்போம்…

சென்னை:அடங்க மாட்டேங்குதே கொரோனா… என்ற பீதியில் உலகமே உறைந்து கிடக்கிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் நாளை (ஞாயிறு) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எந்த கருத்து மாறுபாடும் இல்லாமல் அனைவருமே தாமாக முன் வந்து ஊரடங்கை பின்பற்ற தயாராகிவிட்டார்கள்.

வீட்டுக்குள் முடங்குவதால் விட்டுவிடுமா என்ன? இது அடுத்து வரப்போகும் பல நாள் ஊரடங்குக்கான முன்னோட்டமே என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் கிளம்பி உலா வருகின்றன.

ஆனால், மோடி அறிவித்த இந்த சுய ஊரடங்கின் பின்னணியில் மிகப்பெரிய சூட்சுமம் இருக்கிறது.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

எவரது உடலில் இருக்கிறதோ அவரிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால் நம் உடலிலும் தொற்றிக்கொள்ளும். அதேபோல் இந்த வைரஸ் இருப்பவர்கள் தொட்ட இடத்திலெல்லாம் கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டிருக்கும். உதாரணமாக பொதுக்குழாய், இருக்கைகள், பஸ், ரெயில்களின் இருக்கைகள், கைப்பிடிகள் போன்றவைகள். இதில் ஏதாவது ஒன்றை கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியே நடமாடினால் நிச்சயம் தொட நேரிடும். அப்போது வைரஸ் நிச்சயம் உடலிலும் ஒட்டிக்கொள்ளும்.

இதை தவிர்ப்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.

ஒரு இடத்தில் இருக்கும் இந்த வைரசின் ஆயுட் காலம் 12 மணி நேரம்தான். அந்த நேரத்துக்குள் யாராவது தொட்டால் ஒட்டிக்கொள்ளும். இல்லாவிட்டால் செத்துப்போகும்.

இப்போது, நமது ஊரடங்கு என்பது அநேகமாக இன்று இரவே தொடங்கிவிடும். நாளை இரவு 9 மணி வரை வெளியில் நடமாடப்போவதில்லை.

இரவு 9 மணிக்குப் பிறகு அப்படி என்ன தலைபோகிற வேலை இருக்கப்போகிறது? அதன்பிறகும் ஊரடங்குதானே! மறுநாள் (திங்கள்) காலையில் இருந்துதான் ஒவ்வொருவரும் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார்கள்.

மோடி அறிவித்தது 14 மணி நேர ஊரடங்குதான். நாம் கடைபிடிக்க போவது 36 மணி நேர ஊரடங்கு.

கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது 12 மணி நேரம்தான். ஆனால் 14 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரம் வரை அதை நாமும் நெருங்கப்போவதில்லை. அதேபோல் நம்மையும் நெருங்க அனுமதிக்கப்போவதில்லை. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் தடுக்கப்படுகிறது.

அடுத்த 3 முதல் 4 வாரங்கள்தான் நெருக்கடியான காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்தகால கட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்திவிட்டால் வீழ்வது கொரோனாவாக இருக்கும். வாழ்வது நாமாக இருப்போம்.

maalaimalar