இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா

புதுடில்லி : இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : கொரோனா வைரசால், இதுவரை 270 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 62 பேரும், கேரளாவில் 40 பேரும், உ.பி.,யில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்காட்லாந்து சென்று கோல்கட்டா திரும்பிய 20 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

dinamalar