இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில்  இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே,  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை  தனிமைப்படுத்த உத்தரவிட்டதை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்றி, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

dailythanthi