கொரோனா அப்டேட்ஸ் – இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 8 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 34 பேர் பலியாகினர் எனவும் தெரிவித்துள்ளது.

malaimalar