2000 பேருக்கு உதவிய குட்டி பத்மினி

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை குட்டி பத்மினி 2 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சின்னத்திரை நடிகர்கள், சினிமா தொழிலாளர்கள், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் சின்னத்திரை தயாரிப்பாளரும், நடிகையுமான குட்டி பத்மினி சின்னத்திரை நடிகர்கள், சின்னத்திரை இயக்குனர் சங்கம், எழுத்தாளர் சங்கம், பெப்சி, சினிமா பத்திரிகையாளர் சங்கம்,  தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏறத்தாழ 2000 பேர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள், பண உதவி என வழங்கி உள்ளார்.

malaimalar