திருமணத்திற்காக செலவு செய்ய திட்டமிட்டு இருந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய நடிகை

திருமணத்திற்காக செலவு செய்ய திட்டமிட்டு இருந்த பணத்தை பிரபல இந்தி டிவி நடிகை பூஜா பானர்ஜி கொரோனா நிதியாக வழங்கி உள்ளார்.

மும்பை, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நடிகர் நிகில், பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி கிருஷ்ணப்பாவின் சகோதரர் பேத்தி ரேவதி ஆகியோருக்கு 17-ந் தேதி (நேற்று) ராமநகரில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.  இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். 45 கார்களுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். திருமணம் நடந்த அந்த பண்ணை வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இவர்களது திருமணம் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், பிரபல இந்தி டிவி நடிகை பூஜா பானர்ஜி செய்த இந்த விஷயம் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் இந்தி டிவி நடிகை பூஜா பானர்ஜிக்கும் சின்னத்திரை நடிகர் குணால் வர்மாவுக்கும் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 15ம் தேதி திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், லாக் டவுன் காரணமாக திருமண விழாவை ரத்து செய்துவிட்டனர்.

ஏப்ரல் 15ம் தேதி நடைபெற விருந்த இவர்களது திருமண நிகழ்ச்சி ரத்தான நிலையில், அதற்காக செலவு செய்ய திட்டமிட்டு இருந்த மொத்த தொகையையும் கொரோனா வைரஸ் காரணமாக உணவின்றி பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவும் வண்ணம் உதவி செய்துள்ளனர். அவர்களின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சினை முற்றிலுமாக முடிந்த பிறகு, நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து விருந்து நடத்தவும் உள்ளதாகவும். ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரில் வாழ்த்த இயலாத பலரும் தொலைபேசி மூலம் செய்து வாழ்த்தி தெரிவித்தப்பதாகவும். அவர்கள் அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

dailythanthi