மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வேலை பார்த்த 40 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. மொத்தம் 10498 பேரருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர் பலியாகி உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 40 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாலேகான் நகரம் மிகவும் கவலைக்குரிய ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது.
மாலேகான் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 258 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
malaimalar