கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 34752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1147 ஆக உயர்ந்துள்ளது. 8889 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
malaimalar