மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 15786 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 145380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து 60491 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 52667 ஆக உயர்ந்துள்ளது. 1695 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 15786 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் 17082 பேருக்கும், குஜராத்தில் 14460 பேருக்கும், டெல்லியில் 14053 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அந்தமான் நிகோபார் தீவுகள் – 33
ஆந்திர பிரதேசம் – 3,110
அருணாச்சல பிரதேசம் – 2
அசாம் – 526
பீகார் – 2,730
சண்டிகர் – 238
சத்தீஸ்கர் – 291
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 2
டெல்லி – 14,053
கோவா – 67
குஜராத் – 14,460
அரியானா – 1,184
இமாச்சல பிரதேசம் – 223
ஜம்மு – காஷ்மீர் – 1,668
ஜார்க்கண்ட் – 377
கர்நாடகா – 2,182
கேரளா – 896
லடாக் – 52
மத்திய பிரதேசம் – 6,859
மகாராஷ்டிரா – 52,667
மணிப்பூர் – 39
மேகாலயா – 14
மீசோரம் – 1
நாகலாந்து – 3
ஒடிசா – 1438
புதுச்சேரி – 41
பஞ்சாப் – 2,060
ராஜஸ்தான் – 7,300
சிக்கிம் – 1
தமிழ்நாடு – 17,082
தெலுங்கானா – 1,920
திரிபுரா – 194
உத்தரகாண்ட் – 349
உத்தர பிரதேசம் – 6,532
மேற்கு வங்காளம் – 3,816
மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-2970
மொத்தம் – 1,45,380.
malaimalar

























