3 படங்களை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் பிரபல தயாரிப்பாளர்

பிரபல தயாரிப்பாளர் தயாரித்த 3 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள், வணிக வளாககங்கள் திறப்பதற்கு இன்னும் அனுமதியளிக்கவில்லை.

இதனால் சில படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மே 29 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ திரைப்படம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்பரேசன் தயாரித்துள்ள படங்களான ‘அண்டாவக் காணோம்’, ‘வா டீல்’, ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

malaimalar