மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு கால தாமதமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது
இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக இருந்து வரும் எம்சிஏ படிப்பு வரும் 2020-2021கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பால் எம்சிஏ படித்து வரும் மாணவர்கள் மற்றும் இனி படிக்க விரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
dinamalar