மகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

துருவ் விக்ரம், விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், தனது மகன் துருவை மாஸ் ஹீரோவாக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய வர்மா படம் மூலம் கவனம் ஈர்த்த துருவ், இப்படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மகன் துருவை மாஸ் ஹீரோவாக்கவே விக்ரம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் ஏற்கனவே இருமுகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar